எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு…
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), லூயிஸ் டு ப்ளூய், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிபோனெலோ மகன்யா, மொயின் அலி, டொனோவன் ஃபெரீரா, டக் பிரேஸ்வெல், தயான் கலீம், சாம் குக், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர்(கே), டேன் விலாஸ், விஹான் லுபே, அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், கோடி யூசுஃப், ஓபேத் மெக்காய், தப்ரைஸ் ஷம்சி.