எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பேட்டிங்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே சன்ரைசர்ஸ் அணி முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது. தற்ப்போது இரண்டாவது முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆவலுடன் உள்ளது. அதேசமயம் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ பிரீட்ஸ்கி, குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், பானுகா ராஜபக்சே, ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மஹராஜ்(கே), ஜூனியர் தலா, நவீன்-உல்-ஹக், ரீஸ் டோப்லி.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹெர்மன், டேவிட் மாலன், டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சென், லியாம் டௌசன், சைமன் ஹார்மர், டேனியல் வோரால், ஓட்னியல் பார்ட்மேன்.