எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ஏற்கெனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் : ரியான் ரிக்கெல்டன், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கீரன் பொல்லார்ட் (கே), டெவால்ட் ப்ரெவிஸ், டெலானோ பொட்ஜிட்டர், ஜார்ஜ் லிண்டே, தாமஸ் கேபர், ககிசோ ரபாடா, நுவான் துஷாரா.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிஸ் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், லியூஸ் டு ப்ளூய், வெய்ன் மேட்சன், மொயீன் அலி, டோனோவன் ஃபெரீரா, டேவிட் வைஸ், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர், கைல் சிம்மன்ட்ஸ்.