எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இதில் ஏற்கெனவே டர்பன் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் இமாலய வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இப்போட்டியில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ பிரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கீமோ பால், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ்(கே), நூர் அகமது, ரீஸ் டாப்லி, நவீன்-உல்-ஹக்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: லியுஸ் டு ப்ளூய், ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், வெய்ன் மேட்சன், மொயீன் அலி, டொனோவன் ஃபெரீரா, டக் பிரேஸ்வெல், தயான் கலீம், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.