தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி விளையாடுகிறது.
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், விஹான் லுபே, டேவிட் மில்லர்(கே), மிட்செல் வான் ப்யூரன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஃபேபியன் ஆலன், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஓபேட் மெக்காய்.
மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன்: ரஸ்ஸி வான்டெர் டுசென், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கீரன் பொல்லார்ட்(கே), கானர் எஸ்டெர்ஹூய்சென், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, தாமஸ் கேபர், ஒல்லி ஸ்டோன்.