தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி வெற்றிபெற்றுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பியில் பார்ல் ராயல்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
பார்ல் ராயல்ஸ் : ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், விஹான் லுபே, டேவிட் மில்லர்(கே), மிட்செல் வான் ப்யூரன், ஃபேபியன் ஆலன், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஓபேத் மெக்காய்
எம்ஐ கேப் டவுன்: ரஸ்ஸி வான்டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கானர் எஸ்டெர்ஹூய்சன், கீரன் பொல்லார்ட்(கே), ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா, தாமஸ் கேபர், நுவான் துஷாரா.