எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 1: டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங் தேர்வு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள டர்பன் சூப்பர்…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி கேப்டவுனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ பிரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ் (கே), ரீஸ் டாப்லி, ஜூனியர் தாலா, நவீன் உல் ஹக்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹர்மன், டேவிட் மாலன், டாம் அபெல், ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், லியாம் டௌசன், மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், டேனியல் வோரால், ஒட்னியல் பார்ட்மேன்.