எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக…
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இத்தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), லூயிஸ் டு ப்ளூய், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிபோனெலோ மகன்யா, மொயின் அலி, டொனோவன் ஃபெரீரா, டக் பிரேஸ்வெல், தயான் கலீம், சாம் குக், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ பிரீட்ஸ்கி, குயின்டன் டி காக், பனுகா ராஜபக்சா, டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ் (கே), ரீஸ் டாப்லி, ஜூனியர் தாலா, நவீன் உல் ஹக்.