எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங் தேர்வு!
இரண்டாவது சீசன் எஸ்ஏ20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் பிளே ஆஃப்…
இரண்டாவது சீசன் எஸ்ஏ20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், புள்ளிப்பட்டியளில் எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹெர்மன், டேவிட் மாலன், டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், பெயர்ஸ் ஸ்வான்போல், சைமன் ஹார்மர், டேனியல் வோரால்
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(w), விஹான் லுபே, மிட்செல் வான் புயூரன், டேவிட் மில்லர்(கே), டேன் விலாஸ், இவான் ஜோன்ஸ், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஓபேட் மெக்காய், தப்ரைஸ் ஷம்சி.