எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பந்துவீச்சு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இத்தொடரில் இவ்விரு…

இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில், முந்தை தோல்விக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: டேவிட் மாலன், ஆடம் ரோஸிங்டன், ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சென், பேயர்ஸ் ஸ்வான்போல், லியாம் டௌசன், சைமன் ஹார்மர், டேனியல் வோரால்.
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸோவ், கொலின் இங்க்ராம், ஜேம்ஸ் நீஷம், ஷேன் டேட்ஸ்வெல், வெய்ன் பார்னெல்(கே), ஈதன் போஷ், ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்.