T20 WC 2024: முன்ஸி, மெக்முல்லன் அதிரடியில் ஓமனை பந்தாடியது ஸ்காட்லாந்து!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது.…
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு நசீம் குஷி - பிரதிக் அத்வலே இணை தொடக்கம் கொடுத்தனர்.