SL vs AFG, 1st ODI: டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள…
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), முகமது நபி, இக்ராம் அலிகில், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நூர் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத் மலிக்.
இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன்.