ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஷுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஸ்காட் போலண்டிற்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன், டாட் மர்ஃபி
இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்னே, ஓஷதா ஃபெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கேப்டன்), குசால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், ஜெஃப்ரி வான்டர்சே, அசிதா ஃபெர்னாண்டோ.