இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ், ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்க(கேப்டன்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, அசித ஃபெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.