இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்காவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பந்த், ரியான் பராக், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை அணி : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.