இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷ்னா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் கேஎல் ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு ரிஷப் பந்த், ரியான் பராக் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கே), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, ஜெஃப்ரி வண்டர்சே
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரியான் பராக், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.