இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தியதோடு, தொடரையும் சமன் செய்தது.
இந்நிலையில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா(கே), மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்கா.
ஜிம்பாப்வே: கிரேக் எர்வின், டினாஷே கமுன்ஹுகாம்வே, பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா(கே), கிளைவ் மடாண்டே, டோனி முனியங்கா, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளெசிங் முசரபானி.