ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை - சஞ்சு சாம்சன்!
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி…
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.