ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியிலுள்ள ஷேக் சயித் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஷார்ஜா வாரியர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ஷார்ஜா வாரியர்ஸ்: டாம் கோஹ்லர்-காட்மோர், எவின் லூயிஸ், மொயின் அலி(கே), டேவிட் மலான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் பெஞ்சமின், முகமது நபி, கிறிஸ் வோக்ஸ், ஜுனைத் சித்திக், நவீன்-உல்-ஹக், முஹம்மது ஜவதுல்லா
அபுதாபி நைட் ரைடர்ஸ்: பால் ஸ்டிர்லிங், ஜோ கிளார்க், பிராண்டன் கிங், சரித் அசலங்கா, ஆண்ட்ரே ரஸல், கானர் எஸ்டெர்ஹூய்சன், சுனில் நரைன்(கே), அகில் ஹொசைன், மார்சண்ட் டி லாங்கே, மதியுல்லா கான், சபீர் அலி ராவ்