டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி பந்துவீச்சு!

T20 WC 14th Match: England have won the toss and have opted to field
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. மேலும் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: எவின் லூயிஸ், லிண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரேன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகில் ஹொசைன், ஓபேத் மெக்காய், ரவி ராம்பால்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஈயான் மோர்கன்(கே), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷித், டைமல் மில்ஸ்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News