டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டம் மஹ்மதுல்லா முதலில் ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
மேலும் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பங்களாதேஷ்: லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சே, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், காலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃபியான் ஷெரீப், பிராட்லி வீல்.