ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.