ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டல்லாஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இவ்விரு அணிகளும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்களும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளம் : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், அனில் ஷா, ரோஹித் பவுடல்(கே), குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, அபினாஷ் போஹாரா, சாகர் தாகல்
நெதர்லாந்து : மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), தேஜா நிடமனுரு, லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், பால் வான் மீகெரென், விவியன் கிங்மா.