அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஓமான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளது. ஏற்கெனவே ஓமன் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று தோல்வியிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஓமன்: நசீம் குஷி, பிரதிக் அத்வலே, அகிப் இலியாஸ்(கே), ஸீஷன் மக்சூத், காலித் கைல், அயான் கான், மெஹ்ரான் கான், ரஃபியுல்லா, ஷகீல் அகமது, கலீமுல்லா, பிலால் கான்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, சார்லி டியர், பிராண்டன் மெக்முல்லன், ரிச்சி பெரிங்டன்(கே), மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ்டோபர் சோல், சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்..