அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஃபுளோரிடாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங்(கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஸமான், உஸ்மான் கான், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்.