ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது.
அதன்படி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகின்றன.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி