ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து அணியை எதிர்த்து கனடா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தங்களது வெற்றிக்கணக்கைத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
கனடா: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா, தில்ப்ரீத் பஜ்வா, சாத் பின் ஜாபர்(கே), தில்லன் ஹெய்லிகர், கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங்(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், கிரேய்க் யங்