சிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கனடா: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயாஸ் மொவ்வா, ரவீந்தர்பால் சிங், சாத் பின் ஜாபர்(கே), தில்லன் ஹெய்லிகர், கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஜமான், உஸ்மான் கான், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்