ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ய்ம் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி அணியில் இணைந்துள்ளார்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலாஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.