ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
அதேசமயம் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிபெறும் பட்சத்தில் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு நிலைக்கும் என்பதால் தான்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இரு அணியும் அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசைக் கொண்டுள்ளதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், குல்பாதின் நைப், முகமது நபி(கே), கரீம் ஜனத், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹசன், முஜீப் உர் ரஹ்மான்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்.