ஐக்கிய் அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடி, அதில் இங்கிலாந்து பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை வென்றது.
இதனால் இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிகான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் மலான், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஈயான் மோர்கன் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.