எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்து, நேற்று முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும், ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹாபர்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், சிமி சிங், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில்.
இலங்கை: குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, அஷேன் பண்டார, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, பினுர ஃபெர்னாண்டோ, லஹிரு குமார.