டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஹாபர்ட்டில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
ஜிம்பாப்வே : ரெஜிஸ் சாகப்வா, கிரெய்க் எர்வின் (கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி
அயர்லாந்து : ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, மார்க் அடேர், சிமி சிங், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்.