ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் குரூப் ஒன்றின் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்டி பால்பிர்னி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் சம புள்ளிகளுடன் இருப்பது மட்டுமின்றி, இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹேண்ட், ஜோசுவா லிட்டில்.