தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி தொடங்கும் முன் மழை பெய்த காரணத்தால் போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின், இப்போட்டியில் டாஸை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லைகா கோவை கிங்ஸ் : எஸ் சுஜய், ஜெயராமன் சுரேஷ் குமார், சாய் சுதர்சன், ஷாருக் கான்(கே), யு முகிலேஷ், ராம் அரவிந்த், அதீக் உர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்
திண்டுக்கல் டிராகன்ஸ்: விமல் குமார், சிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதி குமார், ரவிச்சந்திரன் அஷ்வின்(சி), சுபோத் பதி, வருண் சக்ரவர்த்தி, பி விக்னேஷ், எஸ் தினேஷ் ராஜ், சந்தீப் வாரியர், விபி திரன்.