விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில், இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் அணி லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இரு அணியிலும் நட்சத்திர் வீரர்கள் உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஆர் கவின், சாய் சுதர்சன், அஸ்வின் வெங்கடராமன், ஷாரூக் கான் (கே), முகிலேஷ், அபிஷேக் தன்வார், என் செல்வ குமாரன்,அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் ஸ்ரீநிவாசன்.
ரூபி திருச்சி வாரியர்ஸ் (விளையாடும் லெவன்): ஆதித்யா கணேஷ் (வ), கே முகுந்த், சுமந்த் ஜெயின், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், நிதிஷ் ராஜகோபால், எம் மாதிவண்ணன், சுனில் சாம், ரஹில் ஷா (கே), ஆகாஷ் சும்ரா, சரவன் குமார்.