ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர் விளையாடவுள்ளார். அதேசமயம் இந்திய அணி எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் களமிறங்குகிறது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(கே), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.