ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் முடித்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான்(கே), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, நஜிபுல்லாஹ் சத்ரான், தர்வீஷ் ரசூலி, ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அஹ்மத், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
ஐக்கிய அரபு அமீரகம்: முஹமது வசீம்(கே), ஆர்யன் லக்ரா, விருத்யா அரவிந்த், தனிஷ் சூரி, துருவ் பராஷர், பாசில் ஹமீத், அலி நசீர், அயன் அப்சல் கான், அகிஃப் ராஜா, ஜுனைத் சித்திக், முஹமது ஜவதுல்லா