இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரனான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இன்றுடன் முடிவடைகிறது.
இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், ரிஷி தவான் தலைமையிலான ஹிமாச்சல் அணியும் முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹிமாச்சல் அணியின் கேப்டன் ரிஷி தவான் முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளார்.
மேலும் இப்போட்டியிலும் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றால் 6ஆவது முறையாக விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பையை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு: பாபா அபராஜித், ஜெகதீசன், விஜய் சங்கர்(கே), பாபா இந்திரஜித், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், சாய் கிஷோர், சிலம்பரசன், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர்.
ஹிமாச்சல பிரதேசம்: ஷுபம் அரோரா, பிரசாந்த் சோப்ரா, திக்விஜய் ரங்கி, நிகில் கங்டா, அமித் குமார், ரிஷி தவான்(கே), ஆகாஷ் வசிஷ்ட், பங்கஜ் ஜெய்ஸ்வால், மயங்க் டாகர், வினய் கலேடியா, சித்தார்த் சர்மா.