பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 1-1 என்ற காணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில், நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது, 36ஆவது ஓவரை ஹரிஸ் ராவூஃப் வீச அதனை பேட்டர் சிங்கிள் அடித்தார். அப்போது பீல்டர் முகமது வசீம், உடனே பந்தை நான் ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் வீசினார். பந்து ஸ்டெம்பில் படாமல், நேரடியாக நடுவர் அலீம் தாரின் காலில் பட்டது. வலியால் துடித்த அவர், ஆத்திரத்தில் தனது கையில் வைத்திருந்த பௌலரின் ஜெர்ஸியை கீழே வீசியெறிந்தார்.
Ouch #PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/JyuZ0Jwxi5
— Pakistan Cricket (@TheRealPCB) January 11, 2023
இதனை பார்த்து, மற்ற வீரர்கள் சிரித்த நிலையில், நஷிம் ஷா உடனே நடுவரிடம் ஓடிச் சென்று, அவரது காலை பிடித்து தேய்துவிட ஆரம்பித்தார். இதற்கு நடுவரும் களத்திலேயே நன்றி தெரிவித்தார். இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.