வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவமன் பாவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல்(கே), ஷிம்ரான் ஹெட்மையர், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட், ரோஸ்டன் சேஸ், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோஸப், ஓபேட் மெக்காய்.