மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.
இலங்கை மகளிர் அணி:விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா மாதவி, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா, அனுஷ்கா சஞ்சீவனி , சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர.