WPL 2024 Final: டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்திய நிலையில், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியானது முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியது.
இதையடுத்து இன்று நடைபெறும்…

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் : மெக் லானிங்(கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா, ஷிகா பாண்டே, மின்னு மணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ஷ்ரத்தா போகர், ரேணுகா தகர்கர்.