இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இத்தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால், தங்களது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி (கே), லாரா வோல்வார்ட், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர், கேத்ரின் பிரைஸ், தனுஜா கன்வர், மேக்னா சிங், மன்னத் காஷ்யப், ஷப்னம் ஷகில்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : சப்பினேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா(கே), எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி டிவைன், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர்.