WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியாது மும்பை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News