இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றதால், அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் டெல்லி அணி விளையாடவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர்: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர்(கே), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், எஸ் சஜனா, ஷப்னிம் இஸ்மாயில், ஹுமைரா காசி, சைகா இஷாக்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர்: மெக் லானிங்(கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசன், தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, டிடாஸ் சாது, ஷிகா பாண்டே, ராதா யாதவ்.