இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறமுடியும். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், பிரியங்கா பாலா, ஹர்மன்பிரீத் கவுர்(கே), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி மோலினக்ஸ், எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசட், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாக்கூர் சிங்.