மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், சபினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.
யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி(கே), கிரண் நவ்கிரே, சாமரி அதபத்து, கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, பூனம் கெம்னார், சோஃபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கயக்வாட், சைமா தாகூர், அஞ்சலி சர்வானி.