ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது.
இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் (விளையாடும் லெவன்): முகமது நைம், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், நசும் அகமது, முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, ஷரிஃபுல் இஸ்லாம்.
ஜிம்பாப்வே (விளையாடும் லெவன்): ததிவானாஷே மருமணி , வெஸ்லி மாதேவெர், ரெஜிஸ் சகாப்வா, டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கே), ரியான் பர்ல், லூக் ஜோங்வே, மில்டன் ஷும்பா, வெலிங்டன் மசகாட்ஸா, பிளசிங் முசராபானி, டெண்டாய் சதாரா.