ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் அயர்லாந்து அணி அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அதிர், கரேத் டெலானி, பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோஷுவா லிட்டில்.
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா(கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, பிரையன் பென்னட், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.